. ஏதோ மண்ணில் பிறந்து விட்டோம் நம்பிக்கையுடன் வாழ்த்துதான் ஆகவேண்டும் என்று வாழ்க்கையை சொல்லும் ஒரு இளைஜனை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது ஓந்தாச்சி மடத்தை பிறப்பிடமாக கொண்ட தயா என்ற நண்பர்தான். அவருடைய உளக் கிளறல்கள் சொல்கின்றான். 

சிறு வயதிலே அப்பா பிரிந்து சென்று விட்டார். பாய் இளைத்து, பெட்டி இளைத்து குடும்பத்தை நடத்தியிருந்தார் இவனது தாய். ஐந்து உறவுகள் இருக்கிறது. தனது உறவுகள் பிரிந்து சென்ற நிலையில் தற்பொழுது தாயும் தங்கையுமே இருக்கின்றாள். 


பாய் இளைத்து, பெட்டி இளைத்து சீவியத்தை நடத்தி வந்த தாய்க்கு கூட கண் பார்வை குறைந்து விட்டது.  வீட்டுக்கு வந்த ஒரு ஒரு வருமானம் கூட தவிடு பொடி ஆகி விட்டது . தாயின் கண் பார்வை போனதிலிருந்து குடும்பச் சுமை  என் பொறுப்பில் சார்ந்து கொண்டது

சிறு வயதில் ஏற்பட்ட சிறு நோய் காரணமாக கை ஒன்றும்  கால்  ஒன்றும் வழக்கமில்லாமல் போயிருக்கின்றது . தன் குடும்பத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையில்  வருமானம் பெற்று அன்றாட உணவுத் தேவையாவது வழங்க வேண்டும் என்று நம்பிக்கை ஏற்பட்டது 

.மற்றவர்களை போல என்னாலும் அனைத்து வேலைகளும் செய்ய முடியும் என நம்பினேன். வழக்கமில்லாத என் கை கால் போன்றவை இருந்தாலும் என் மனதிலிருந்து அக் குறைகளை தூக்கி தூர வீசினேன்.
நான் அருகாமையில் கரை வலை கடற்தொழிலில்  சேர்ந்து தொழிலை செய்து வருகின்றேன் 

ஆனால் என்னை சொத்திக்கையன் என்றல்லாம் கேலி செய்தார்கள். இதோடு என்ன வேலை செய்யமுடியும் என்றல்லாம் கேட்டனர் .தற்பொழுது 28 வயதாகின்றது தனது குடும்பத்தை நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்று கடல் தொழிலை நம்பியிள்ளதாகவும் அதுவும் மந்தகதியில் தனது தொழிலும் செல்வதாக குறிப்பிட்டார். 

எவ்வாறாக இருந்தாலும் நம்பிக்கையுடன் என் வாழ்க்கை செல்வதாக அவரது உள்ளக் குமுரல்களை  தயா குறிப்பிட்டார். பணத்தில் உயர்ந்து செல்வந்தனாக இருப்பவனை விட .நம்பிக்கையில் செல்வந்தவனாகி பணத்தில் ஏழையாக இருக்கும் இந்த மனிதரை பாராட்டியே ஆக வேண்டும்.  எத்தனையோ  இளைஜர்கள் பெற்றோர்களை என்னாத எவ் உலகில் இவன் ஒரு மாறன்தான்

0 comments:

Post a Comment

 
Top