மட்டக்களப்பு களுதாவளையில் பல இடங்களில் வெள்ளம் .களுதாவளையில் சில நாட்களாக தொடர்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக களுதாவளை மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக தொடர்சியாக பெய்துகொண்டிருக்கின்ற மழை காரணாமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன


 அது மட்டுமன்றி அன்றாட வாழ்க்கைகளும் பாதிக்கப் பட்டிருக்கின்றன அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் பயிர்கள் கூட மழை காரணமாக நோய்கள் ஏற்பட்டும் வெள்ளத்தினாலும் அழிந்து போயிருக்கின்ற நிலையில் பயிர் செய்கை மேற்கொள்கின்றவர்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்

அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் எந்த வேலைக்கோ செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது அத்தோடு கடல் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .தொடர்சியாக மழை பெய்துகொண்டிருக்கின்ற காரணத்தினால் பெரும் சிரமங்களை களுதாவளை மக்கள் எதிர் நோக்குகின்றனர்

0 comments:

Post a Comment

 
Top