நம்பிக்கை முதலில் நம்மிடத்தில் வர வேண்டும். நாங்களெல்லாம்
சொல்வோம் எதை எடுத்தாலும் கடவுள்
பார்த்துக் கொள்வார் என்று சொல்வதை விட
நாம் நம்மை நம்ப வேண்டும். அதன் பிறகு கடவுளை நம்புங்கள். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் நீ பலவீனனாகவே இருப்பாய் எந்த வேலை செய்வதென்றாலும் உன்னால்
முடியாமல் இருக்கும் . ஆனால் உன்னில் நம்பிக்கை வைத்து இன்றிலிருந்து ஏதாவது ஒன்றில்
சோதனை செய்து பார் வெற்றி உன் கையில்தான்.
தோல்விகளையும் தவறுகளையும் உன் காதில்
வாங்கிக்கொண்டு கவலைப்படாமல் அவைகள் உன் வெற்றிக்கான ஆரம்பமாக நினைத்துக்கொள். உன்னை
மற்றவர் கேலி செய்கிறார்களா? கவலைப்படாதே ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்து விட்டு செல்லுங்க. எம்மில் இருக்கும்
பலவீனத்திர்க்குரிய பரிகாரம் பலவீனத்தை பற்றி
சிந்திப்பதில்லை மாறாக வலிமையை பற்றி
சிந்திப்பதுதான் நல்லது. நம்முடைய
முதலாவது எதிரிக் கூட்டம் எவைகள் எது தெரியுமா? பயம் கூச்சம் கோபம் இவைகளை
குறையுங்கள் அப்புறம் பாருங்க உங்களையே நம்ப
மாட்டீங்க வெற்றிதான் சுருக்கமா சொன்னா புரியும் என்று நினைக்கிறான்

0 comments:
Post a Comment