
அட அதையும் விட மாட்டாய்களா
அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென்(வயது 38). 5 குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது
. இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி குடித்து வருகின்றனர். இது குறித்து அரோ- லியா கூறுகையில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து வருகின்றோம்.
இவ்வாறு இரத்தம் குடிப்பது எங்களது உறவை மேலும் பலப்படுத்துகிறது. வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்....
0 comments:
Post a Comment