அட கொக்கா மக்கா இப்டியும் நடக்குதா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 சீனாவில் உள்ள ஒரு தாய்,தான் பெற்ற மகனை 40 வருடங்களாக கிளியை அடைத்து வைப்பது போல கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்த்துள்ளார். தன் மகன் மனநிலை சரியில்லாத காரணத்தால் அவனை சரியாக பராமரிக்க முடியாத காரணத்தினால்தான் கூண்டுக்குள் அடைத்து வைத்ததாக அவர் காரணம் கூறியுள்ளார். Peng Weiqing என்பவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் தனக்கு ஆறு வயதாக இருக்கும்போது கடுமையான காய்ச்சல் வந்ததால் அவருக்கு திடீரென மனநோய் ஏற்பட்டுள்ளது. மனநிலை சரியில்லாமல் போனதால், இவரை இவருடைய பெற்றோர் கிளிக்கு கூண்டு செய்வது போன்று ஒரு கூண்டை செய்து அதில் அடைத்து வைத்து உணவு மற்றும் உடைகளை கூண்டிற்குள் கொடுத்து வந்துள்ளனர். 40 வருடங்களாக் கூண்டுக்குள் இருந்து வரும் இவருக்கு வெளியுலகம் என்பதே என்ன என்பது தெரியாது. மேலும் இவருக்கு அம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாது. Waimei என்ற 80 வயது பெண் இவரது தாயார் அவர். அவரும் தற்போது உடல்நலமின்றி மரணப்படுக்கையில் இருப்பதால் இவரை யார் கவனித்து கொள்வது என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த தகவல் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது. தற்போதுதான் இந்த தகவல் தெரிந்து சமூக ஆர்வலர்கள் Peng Weiqing என்ற நபருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top