அனைவருக்கும் வணக்கம் இப்போ எல்லாம் நம்மளோட அனுவங்களையே பதிவுகளா தரலாம் அப்படி என்கிற ஒரு எண்ணம் தொன்னிச்சி இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கும் நிச்சயமா இருக்கலாம் இந்த பதிவின் மூலம் உங்களது கடந்த கால நினைவுகளையும் ஒரு தடவ மீட்டி பார்ப்பீங்க அப்படி என்ற ஒரு எண்ணத்திலதான் இந்த பதிவ எழுதிறங்க .வயசு போயிருந்தாகூட இப்படியான சின்ன வயசு சம்பவங்கள நினைத்து பாக்கிற நேரம் அட இப்படியும் நம்ம லவ் பன்னிருக்கமோ அப்படி எண்ணம் வரும் சரி வாங்க நம்ம கதைய சொல்லுறன்நானும் இந்த வருடம் கதிகாம கந்தனுட்ட போகணும் போயும் பல வருடங்கள் ஆச்சி அப்படி எண்ணு நம்ம ஊரவங்க நம்ம நண்பர்கள் எல்லோரையும் கூட்டிக்கிட்டு ஒரு வஸ் புடிச்சுகிட்டு போனோம் நம்ம நண்பர்களோட போறதுன்னா கேக்கவா வேணும் ஒரே ஜாலிதான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வயது வித்தியாசம் இல்லாம செம ஜாலி .
அன்று சாமி கும்பிட்டு விட்டம் அங்க பாக்கணுமே நம்ம பசங்கள கேக்கவா வேணும் சிங்கள தமிழ் பொண்ணுங்க ஏகப்பட்டது அவங்கள பாத்திக்கிட்டே திருன்சாங்க பசங்க இயல்பே அதானேஅதுக்கு என்னபண்ண முடியும் எழுமலை முருகனை தரிசிக்க போனோம் அங்க நல்ல முருகன கும்புட்டுக்கிட்டு நாங்க இறங்கி வந்தோம் அப்பதான் நம்ம கீரோயினி என்ன குரோஸ் பண்ணி இறங்கி என்ன முந்தி போனா
அவள பாத்ததும் இனம் புரியாத ஒரு சந்தோசம் உள்ளுக்குள்ள ஏதோ என் மனசுக்குள்ள அப்படியே அக்குழு குளுத்திற ஒரு சந்தோசம் அவள சந்திச்ச நேரம் அப்படியே ஒரு மென்மையான காற்று. இதல்லாம் பாக்கிற நேரம் நமக்காக பிறந்த தேவதை இவள்தானோ கதிர்காம கந்தனே அனுப்புன என் காதலி இவள்தானோ என்கிற எண்ணம் அப்போ வந்திச்சுங்க
இவ பெயர இப்படியாவது கேக்கனுமே அவகிட்ட போய் கேட்டன் அவ சொல்லவே இல்லையே அவ பெயர கேக்கிரதிற்கு பட்ட பாடு இருக்கே மாமரத்த புடுங்கி மலையில சாத்திர மாதிரி கடைசி வரையும் சொல்லவே இல்லையே அப்புறம் அவ நண்பி அவ பெயர சொல்லி கூப்பிட்டா அப்புறம் என்ன அவ பெயர தெரின்சுகிட்டமுல
ஏழுமலை இறங்கும் போது அவ கூடதான் நம்ம பயணம் அப்போ அவ என்ன கட கண்ணால பாப்பா அந்த பார்வை இருக்கே ஐயோ அந்தே நேரம் வந்த சந்தோசமே தனி மழையே பெய்யாத நிலத்தில ஒரு நாள் மழை பெய்தா அந்த மண் எப்படி சந்தோஷ படும் அதே மாதிரி அவ பார்வை அப்பிடி அவ ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம் போல இருந்தது ஆனாங்க அவ அப்படி ஒன்றும் உலக அழகி இல்ல ஆனால் எனக்கு அழகிதான்
அவளோட மெல்ல மெல்ல பேசி அவளும் நானும் நல்ல நண்பர்கள் போல பேசிக்கிட்டோம் அப்புறம் மலையும் இறங்கி முடிகின்ற இடம் வந்திட்டது அப்பதான் நம்ம பிரிய போறோமே என்கிற ஒரு கவலை கண்கள் கலங்கி மனம் ஏங்கியது போல அவ பார்வை ம்ம்ம் நமக்கும் அப்படித்தான் பிரிவு உறிதியாகிட்டு என என்னுகிட்டேன்
இனி காணவே மாட்டோமா அப்படி என்கிற ஒரு ஏக்கம் அப்புறம் என்ன அடுத்த செல்லக் கதிர்காமத்திற்கு போனோம் எதிர் பார்க்காம எங்க வஸ்சிற்க்கு பக்கத்தில அவகூட ஒரே ஒரு வார்த்த பேசினேன் அவ கூட பேசி இருக்கலாம் ஆனால் அவ அப்பன் பார்வை அப்படியே என்ட கொரவலைய கடிக்கிற மாதிரி குருகுரு என்று என்னயே ஒரு பார்வை இருந்தாலும் விடுவமா போயிட்டு வாரம் என்ற ஒரு வார்த்த போயிட்டு வாங்க அப்படி என்கிற என் பேச்சு அந்த நேரம் உயிரே இல்லாத ஜடம் போல எண்ணம் என் உயிரே அவ கூடவே போனதா ஒரு எண்ணம்
அவள எப்போதாவது ஒரு நாள் சந்திக்கலாம் என்ற சின்ன ஆசையோடு காத்திருக்கேன் இது காதலா தெரியல்ல ஆனால் தலைப்ப அப்படிதான் போட்டிருக்கன் உங்க பழைய காதல் கதையும் கண் முன்னே கட்டாயம் வருதா வரணுமே.........................................................கவனம் உங்க மனைவிக்கு தெரியாம வரட்டும் உங்க காதல் எண்ணங்கள்
இதல்லாம் அந்த அந்த வயசில வாரதுதான் ம்ம்ம்ம் விடுங்க வாஸ்
இப்படி உங்க காதல் கதையும் சொல்லிட்டு போங்க
0 comments:
Post a Comment