அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் வலைப்பூ வாசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி குறிப்பிடுகின்றேன்
குறிப்பாக வலைப்பூ வைத்திருப்பதில் அனைவரும் இப்போ ஈடுபாட்டுடன் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள் உண்மையிலே இது பாராட்டக்கூடிய விசியம்தான் ஏன் என்றால் இதன் மூலம் பல்வேறு எழுத்தாற்றல் மிக்கவர்கள், வாசிப்பு திறமை மிக்க மனிதர்களை உருவாக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை
இவ்வாறாக இருந்தாலும் இப்பொழுது பார்க்கும் போது ஆசிரியர்களை பொறுத்த வரையில் தனது வலைப்பூவில் என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கும் போது காதல், காமம் ,பெண்கள் லீலைகள் போன்ற வற்றை முக்கிய படுத்தி எழுதுகிறார்கள்
இவ்வாறு எழுதுவதற்கான காரணம் என்ன என்று பார்க்கும் போது இதற்கான காரணம் வாசகர்களே ஆகும். ஏன் என்றால் சமுகம் சார்ந்த நல்ல விடயங்களை அல்லது பாராட்டப் படவேண்டிய விடயங்களை பகிரும் போது அதற்கான வரவேற்பும் பாராட்டும் கிடைப்பதில்லை
அதே வேளை இவ்வாறான பாராட்ட வேண்டிய நல்ல பதிவுகளை அதிகமானோர் பார்ப்பதும் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறனவற்றை வாசகர்கர்கள் பார்க்க மறுக்கின்றனர்.
அவ்வாறு பார்த்தால் அதற்கானா பின்னூட்டங்களை பகிர்ந்து அவர்களை ஊக்கிவிக்கவும் மறந்து விடுகின்றார்கள்
அதே வேளை காதல், காமம் பற்றி கட்டுரைகள் வருகின்ற பொழுது ஆர்வத்துடனும் ஆவலுடனும் வெறித்தனத்துடனும் அதனை மும்முரமாக வாசிக்கின்றார்கள் . அதற்கான பின்னூட்டங்களை மிக சிறப்பாக இடுகின்றனர். இவ்வாறு இடுவதன் மூலம் பதிவின் ஆசிரியர்களும் இவ்வாறு நம் பதிவு இருந்தால் அதிகமானோர் பார்வை இடுகின்றார்கள் என எண்ணுகின்றார்கள்
அதுமட்டுமில்லங்க ஒவ்வொரு பதிவிலும் பார்க்கும் போது கொஞ்சம் கவர்சியான படங்களை போட்டோமுன்னா அத அதிகமானவங்க அத விரும்பி பாக்கிறாங்க இதனால எங்கடா நல்ல கவர்ச்சி படம் கிடைக்குதே என்று பதிவுக்கு பொருத்தமான படத்த தேடிப்புடிச்சு போடுறாங்க.
எனவே வாசகர்கள் எண்ணம் பார்வை நல்லவையாக மாறும் போது ஆசிரியர்களும் சிறப்பான படைப்புக்களை தருவார்கள்
நல்ல வாசகர்கள் நல்ல எழுத்தாளர்கள் வலைப்பூவிற்கு அதிகமானவர்கள் பலர் இறக்கின்றார்கள் அவர்களுக்கு பின்னூட்டங்கள் மூலம் இன்னும் அவர்களை முன்னேற்றுவோம்அது மட்டுமல்ல பலர் புது முகங்களாக வலைபூ ஆரம்பித்து தனது பதிவுகளை இடுகின்றார்கள் அவர்களை வரவேற்போம் அவர்கள் விடும் பிழைகளை நம் பின்னூட்டங்கள் மூலம் தெரிவித்துநல்லதொரு எழுத்தாளர்களாக மாற்றுவோம்
அதற்காக எல்லா வாசகர்களும் அப்படியில்லை வலைப்பூ ஆசிரியர்களும் அப்படியில்லை
நம் பின்னூட்டங்கள் நாளைய உலகின் முன்னேற்றமாய் இருக்கட்டும்

0 comments:
Post a Comment