மட்டக்களப்பில் கரிட்டாஸ் ஏகட் நிறுவனம் பல்வேறு சேவைகளை செய்திருக்கிறது எனது பார்வையில் எனக்கு தெரிந்த சில கிராமங்களுக்கு பல உதவிகளை வழங்கியிருக்கின்றது குறிப்பாக களுதாவளையைப் பொறுத்த வரையில் சுனாமிக்கு முன்னதாக சிறு குழுக்கள் மூலம் மக்களிடையே உக்குவித்திருன்தது அதன் பிறகு சுனாமிக்கு பின்னர் அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தது எனலாம் குறிப்பாக சுனாமிமூலம் மக்கள் பாதிக்கப்பட்டு என்ன செய்வதறியாது அல்லல் பட்டு கூடாரங்களிலும் உறவினர்களிலும் இருந்த மக்க்களுக்கு ஒரு நல்ல செய்தியை கரிட்டாஸ் ஏகட் நிறுவனம் வழங்கியது . அனைத்து மக்களுக்கும் ஆதரவு கிடைத்ததை மகிழ்ச்சி அடைந்தனர்
கூடாரங்களில் இருந்தவர்களுக்கு வாழ ஒரு வீட்டினை அழகாக அமைக்கத்தொடங்கின. அதுவும் நல்ல பெறுமதியான வீட்டினை அமைத்தது அதுமட்டுமன்றி சுனாமியினால் பலரும் குறிப்பாக சிறுவர்கள் இளைஜர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளகிருந்தன அவர்களுக்கான சிறுவர் கழகங்கள் இளைஜர் கழகங்கள் போன்றவற்றை அமைத்து அதனூடாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு மன அழுத்தத்திலிருந்து மீட்டுக்கொண்டனர்.
குறிப்பாக சுற்றுலா தியானப்பயிர்ச்சிகள் போன்றவற்றை மேற்கொண்டனர் அது மட்டுமன்றி தனிநபருடைய தொழில் முயற்சிகளை முன்னேற்றும் முகமாக கண்காட்சிகளை நடத்தி அவர்களுக்கான திறமைகளை மற்றவர்களிடம் வெளிக்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சிறுகுளுக்களை ஊக்குவித்து பல அறிவுரைகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்
எமது பார்வையில் எமது பிரதேச மக்களால் பேசப்பட்ட நிறுவகங்களுள் இதுவும் ஒன்று
0 comments:
Post a Comment