அண்மையில் ஒரு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தோம் அது பழம் பெரும் ஆலயங்கள் அன்பான உறவுகள் பனைத் தோட்டங்கள் திராட்சை மரங்கள்  நிறைந்த இலங்கையின் வட பகுதிக்கு  பல இடங்களை  மிக சந்தோசமாக களித்திருந்தாலும் அதில ஒரு  கொஞ்ச நேரம் அந்த ஒரு பேச்சு கண்கள்  கலங்கிட செய்திட்டதுங்க.

அதாவது யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு சென்று சுற்றுளாவை  பார்வையிட்டோம் குறிப்பா நல்லூர், செல்வ சன்னிதி,அனுமான் கோவில் கோட்டை நயினா தீவு  போன்ற இன்னும் பல இடங்கள் சந்தோசமா பாத்திருந்தோம்

ஆனா எல்லா இடங்களையும்  பாத்தாலும் நாங்க வந்து தங்குமிடம் செல்வ சன்னிதிதான் . அன்று இரவு  அழகான ஒரு சிறுவன் அந்த குட்டி பையன பாக்கும் போதுங்க எதுவுமே அறியாத பச்ச மண் போல தனது சின்ன சின்ன வேலைகளை கோவில்ல செய்து கொண்டிருந்தான் நாங்களும் நம்ம நண்பர்களும்  இத பாத்துக்க் கொண்டே  இருந்தோம்

அப்போ எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு  அந்த பையன் வந்தான்  அவன் பார்த்த பார்வை  தாய் பாசம் இல்லாமலும் தந்தையின் அன்பு இல்லாமல்  உறவுகளே இல்லாது தன்னம்  தனியாய் அன்புக்கு ஏங்கும் பச்சிளம் குழந்தையின் பார்வை போல் பட்டது

பக்கத்தில கூப்பிட்டு என்னமாதிரி தம்பி  என்று  அந்த பையனிடம் கதைக்க தொடங்கினோம் . அவனை பற்றி சொன்னான்  .அப்பா இடம் பெற்ற யுத்தத்தில் குண்டு பட்டு செத்திட்டார் . அந்த வலிய  அவனால தாங்கவே முடியல்லயாம் சொல்லும் போதே அவனுடைய கண் கலங்கின

அந்த பையனும்  அம்மா என்ற  உயிராவது  நம்மல நம்பி இருக்குதே என்ன அம்மா நல்லா பாப்பாங்க  நம்ம பெருத்து ராணி மாதிரி அம்மாவை பாக்கணும்  யுத்தம் இல்லாத எங்கயாவது போகணும் அப்பா உயிரை பறித்த இந்த இடம் வேணாம் என்ற எண்ணம்.   சின்னம் சிறுவனா இருந்தாலும் இப்படியெல்லாம்  அந்த பிஞ்சி மனசு  எண்ணிருக்கு பாருங்க

இந்த எண்ணங்கள் பல காலம் நீடிக்கவே இல்ல அவங்க அம்மாவும் யுத்தத்தில செல் பட்டு செத்து போயிட்டாங்க. இந்த வேதனைய அந்த பச்ச மண்ணு  இப்படிதான் தாங்கிடிச்சோ தெரியல்ல .அம்மா இல்ல   அப்பா இல்ல தனியாய் என்னதான் செய்தானோ யாரிடம் அவன் கவலைகள் கதறல்கள சொல்லிருபானோ தெரியல்ல

இப்போ  ஒரு வீட்டில  வேலை செய்றதாம் அவங்க சாப்பாடு கொடுக்கிறதாம்.
இப்போ  அவங்க கொழும்பில  வேல விசியமா போயிருகிராங்களாம் அது வரையும் இந்த கோவில்ல நிக்கிறதாம் .என்ன இருந்தாலும் அம்மா அப்பா இருக்கிற மாதிரி வருமா

.அப்புறம் அவன் அன்று இரவு என்கலோடதான்.அவன நம்ம நண்பன் ஒருவன் பக்கத்தில அன்பா கட்டி பிடிச்சிட்டு படுதிருகான். அப்போ அவன் சொன்ன வார்த்த. என்ன யாரும் இப்படி   பக்கத்திலஅன்பா  படுத்ததில்ல அப்படின்னு சொன்னாங்க

இந்த யுத்தத்தில் இதை போல எத்தனை  குழந்தைகள் பாசம் காட்டும் அம்மைவை இழந்து  அரவணைக்கும் அப்பாவை இழந்து  அன்பு காட்டும் உறவுகளை இழந்து  தனியாய்  எத்தனை குழைந்தைகள் இருக்கின்றதோ

போனது  போகட்டும் இனி இந்த யுத்தம் ஒன்று கனவில் கூட வரக்கூடாதுங்க. .நம் குழைந்தைகள் நம் உறவுகளுடனாவது வாழட்டுமே  நம் குழைந்தைகள் வேறு ஒன்றையும் எதிர் பார்ப்பது இல்லை அம்மா பாசம் அப்பா அன்பு இதைத்தான் எதிர் பார்க்கும்

இருக்கும் வரைக்கும் மனிதனுக்கு மனிதன் அன்பாய் இருப்போம்



0 comments:

Post a Comment

 
Top