தமிழருடைய பாரம்பரிய விடயங்கள் பல இருந்தாலும் சில விடயங்கள் அன்றாடம் நாம் கண்முன்னே நடந்து கொண்டே இருக்கின்றது சிலவற்றை நம்ப கூடியதாக இருக்கிறது சிலவற்றை நம்மப முடியாமல் தலையை பிக்கின்ற விடயாமாகவும் இருக்கும் .அதாவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகளில் அம்பாளுக்கு செய்தல் வைரவனுக்கு செய்தல் என்பவை முக்கியம் பெறுகின்றது.
இவைகள் ஏன் செய்யப்படுகின்றது வீட்டில இருக்கிறவங்களும் பக்கத்தில இருக்கிறவங்களும் வயிறு முட்ட சாப்பிடுறத்துக்கு அப்படி என்று நினைக்காதீர்கள். இது ஒருகடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றது . அதாவது நோய் நொடி வரமால் பேய் பிசாசு நம்ம வளவுக்குள்ள வராம இருக்கிரதிற்கு செய்கின்ற முறை பரவலாக தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இது செய்கின்ற முறைகளை பொறுத்த வரையில் பகல் நேரங்களில்தான் அம்பாளுக்கு செய்கின்ற வழமை இருக்கின்றது. கிராமத்தில் மந்திரம் படித்த கிராமத்து பூசகர் இதனை செய்வர் . முதலில் வீட்டில் சாமி அறையினுள் மூன்று கும்பங்கள் வைக்கப்படும் வைக்கும் பொழுது மந்திரங்கள் ஓதப்பட்டு தேங்காய் நீர் வேப்பிலை மஞ்சள் இன்னும் பல பொருடகள் சேர்த்து என்பவை கொண்டு கும்பம் வைக்கப்படும் குறிப்பா கும்பம் வைக்கும் போது தெய்வங்களை அழைத்து மந்திரங்கள் சொல்லி வைப்பார்கள். குறிப்பா உதாரணத்திற்கு ஒரு காளி அழைப்பு
ஓம் அரிகமய வல்லி ஆங்கார காளி
வீர உத்தண்ட வீரம்மா காளி
உதிர வாயும் ஏறிய பார்வையும்
எரிந்த கண்ணுமாக சிங்க வாகனத்தில் ஏறி
என் முன்னே வா வா
அவேசு ஆவேசு சீக்கிரம் சீக்கிரம்
வருக வருக வே சுவாக
பின்னர் காளி அம்பாள் அல்லது கண்ணகி அம்மன் சக்தி ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கே பூசை பொருட்களை கொடுத்து விட்டு அதன் பின்பு வீட்டில் பொங்கல் பானை அடுப்பில் வைக்க வேண்டும். குறிப்பாக இந்த பொங்கல் சீனி சர்க்கரை பேரீட்சை பிளம்ஸ் மஞ்சள் பலாப்பழம் வாழைப்பழம் கரும்பு சாறு விளாம்பழம் அனேகமான பழங்களையும் ஒன்றிணைத்து மிகவும் ருசியான முறையில் பொங்கல் நடைபெறும்
பின்பு கிராமத்து பூசகரால் மதியம் அளவில் பூசை இடம் பெறும் தேவாரம் கண்ணகி அம்பாளின் காவியம் மந்திரம் உடுக்கை ஒலிக்க இவை அனைத்தும் இடப்பெறும் இந்த வேளையில் தெய்வம் ஆடுகின்றவர்கள் குறிப்பா இந்த மந்திரத்த நம்புவமா வேணாமா என்று இருக்கும் சும்மா இருக்க கும்பம் அதிர பாட்டுக்கு எழும்பும் தெய்வம் ஆடிக் கொண்டிருப்பவன் திடிரென விழுவான் மந்திரம் சொல்லி தண்ணி அடிக்க பிறகு எழும்பி தெய்வம்ஆடுதுகள்
உருக்கொண்டு ஆடுவார்கள் இவர்கள் கட்டு சொல்லுகின்ற முறையும் காணப்படுகின்றது அதுமட்டுமல்ல குழைந்தைகள் மூவரை தெய்வன்காளாக வைத்து அவர்களை தெய்வம் போல் உருவகித்து வழிபடப்படும்
அடுத்தது வைரவனுக்கு செய்தல் வீட்டுக்கு வெளியில் வீட்டு காவலுக்கு இத செய்வாங்கள் . வெளியில் ஒரு பந்தல் அமைத்து அதில சூலம் வைத்து தென்னம் பாளை வைத்து இதற்க்காக அரிசி மாவிலான ரோட்டி அடிக்கப்படும் அதிலயும் ஒரு ரோட்டி போதை வரக்கூடிய கஞ்சா தூள் சேர்த்து சுடப்படும் வைரவ கடவுளுக்கு வெள்ளை பொங்கலும் பொங்கப்படும்
அது மட்டுமல்ல சாராயம் கள்ளு போன்றவை வைக்கப்படும் இப் பூசை வந்து இரவில் தான் நடைபெறும் . இதிலும் வைரவருக்குரிய காவியம் பாடப்பட்டு உடுக்கை ஒலிக்க காவியம் பாடப்படும் அம்பாளுக்கு செய்கின்ற அதே பூசகர்தான் இதை வந்து செய்வார்
இவ்வாறு நம் தமிழர் என்னதான் நவீனத்துவம் அடைந்து வந்தாலும் தமது பாரம் பாரிய நிகழ்வுகளை செய்துகொண்டுதான் வருகின்றார்கள் .
உண்மையில் இந்த நிகழ்வுகள் அதிகமான செலவை ஏற்படுத்துகின்றது பல நாடுகள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து போகின்ற நேரத்தில் சாமி மாமி என்று நேரத்தை வீணடிக்கிறார்கள் . இல்லாத ஒன்றுக்கு வழிபாடு , அப்படி செய்தால் கடவுள் வந்து விடுவார ?இது மூளை இல்லாதவனின் வேலை அப்படி என்று நினைப்பீங்க அப்படித்தான் நானும் நினைத்திருந்தன் ஆனால் ஒரு வீட்டில் சாமி செய்கின்ற நிகழ்வு நடப்பதென்றால் சொந்தங்கள் பந்தங்கள் அனைவரும் வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டு மிக சந்தோசமா செய்வாங்க
மனிதர்கள் ஓடி ஓடி உளைக்கிறதே எதர்க்குங்க சந்தோசத்திற்குதானே அது இங்கு கிடைக்குதுல அப்புறம் என்ன குறிப்பா தமிழர்கள் பாரம்பரிய நிகழ்வுகளின் ஏதோ ஒருநல்ல விசியம் இருக்கும்என்பது புரிஞ்சு கொண்டா சரிதான் அதுமட்டுமல்ல இந்த மந்திரங்கள் உண்மையா கடவுள் உண்மைதான் அப்படியெல்லாம் யோசிக்க தோன்றும்
என்ன இருந்தாலும் நம்ம ஊருநிகழ்வு போல வருமா
.jpg)


0 comments:
Post a Comment