ஒரு மனிதனுக்கு காதல்  வரல்ல அப்படி என்று சொன்னா அந்த நபருக்கு ஒரு நோயாக்கூட இருக்கலாம் அப்படி பலர் சொல்லுரத கேட்டிருப்பீங்க உண்மைதானே சரி  இந்த காதல் யாரைத்தான் விட்டு வச்சது சொல்லுங்க அதிலும் முதல் காதல் என்றால் கேக்கவா வேணும் . நான் மட்டும் விடுபட விதிவிலக்கா இல்லையே சரி இப்போ  விசியத்துக்கு வருவோம். எல்லாரையும் போல எனக்கும் ஒரு ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது இந்த பாளப்போன காதல் வந்திட்டு.

குறிப்பா சொன்ன பாடசாலை பருவம்.  நம்ம நண்பர்கள் பெண் பிள்ளைகளுடைய பெயர்களை நம்ம பையனுகளுக்கு சேர்த்து வச்சி சொல்லுரத்தில கில்லாடிங்க அப்படித்தான் எனக்கு ஒரு பெயரை சொன்னானுங்க நமக்கும் அதில ஒரு மாதிரியா விருப்பம் வந்திட்டு அப்படி பையனுகள் சொன்னா நமக்கு செம சந்தோசம்ஆனாஎனக்கும் காதல் வந்திட்டு சின்ன வயசுதானே வரத்தானே செய்யும் ஆனா நான் அவகிட்ட  சொல்லவே இல்லங்க

 ஆனா  கொஞ்ச நாளால அவளே என்கிட்ட காதல சொன்னா நம்ம பையனுகளும் ஓம் என்று  சொல்லுடா என்று நல்லா ஏத்திவிட்டாங்க நானும் காதலிச்சன் நம்ம பச்ச மன்னாச்சே காதல் எண்டா எதுவுமே  தெரியல்ல எதுவுமே புரியல்ல பொதுவா சொன்னா காதல் நடைமுறை தெரியாது சுருக்கமா சொல்லப் போனா நான் ஒரு பிஞ்சு நொரு

அதுக்கப்புறம் நம்ம நன்பண்ட விசேட நாளுக்கு ஒரே ஒரு நாள் எல்லா பேருமா சேர்ந்து போனோம் அப்போ காதலி என் பக்கத்தில  ரொம்ப சந்தோசம்  எங்க காதல் இப்படியே போக  ஒரு  6, 7 மாதம் ஆகிட்டுங்க அப்போ ஒரு நாள் வந்து வீட்ட பிரட்சன அண்ணா ஏசுறான் அம்மா எசுறான் என்று கதையெல்லாம் விட்டால் உங்க வீட்ட வந்து உன்கிட்ட கதைக்க போறானாம் அண்ணா அப்படி என்று அவ சொன்னாள் அப்போ நானும் நம்ம இந்த புனிதமான ஆழமான  ஆத்மீகமான காதலுக்கு இத்தனை எதிர்பா அப்படி என்று அவ சொன்னத்தையும் நம்பிட்டு ஓகே  உங்க வேலைய நீங்க பாருங்க என் வேலைய நான் பாக்கன் அப்பிடியண்டன்

அதுக்கப்புறம்தான் சிலமாதங்கலால  தெரிஞ்சது  நம்மளோட கூட இருந்த நம்ம பையன அவள் காதலிக்கிறாலம் என்று தெரிய வந்தது சின்ன வயசுதானேங்க  கவலை ஒன்னும் தெரியல்ல நல்ல வேளை இருந்தாலும் அப்படியே மனச கூல் பண்ணிட்டு என் வேலைய நான் பாத்தன்

அப்புறம்  அவங்க திருமணம் கூட அவங்க பெற்றோர் விருப்பம் இல்லாமலே  சில வருஷங்களால நடந்தது  இதிலதாங்க மேட்டரே இருக்கு  இவங்க கலியாணத்திற்கு  நானும் என் நண்பர்க்களும்தான் உதவி செய்தோம்.

நீங்க ஜோசிக்கலாம் காதலிச்சவளுக்கே உதவி செய்த கேவலமானவன் என்று. இருந்தாலும் அவங்க சந்தோசமா இருக்கட்டுமே ஆனால் இப்போ ஜோசிக்கிரன் அந்த பெரிய கண்டத்தில இருந்து தப்பிட்டன் என்று ஆகவே முதல் காதல்ல தோற்றுப்போனா கவலைப்பாடாதிங்க சந்தோசமா எடுங்க சரிதானே

3 comments:

  1. யார் பாஸ் அது? தெரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும். இல்லண்ணா தேடி புடிக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  2. யார் பாஸ் அது? தெரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும். இல்லண்ணா தேடி புடிக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  3. எனக்கு உங்க உண்மை ரும்ப பிடிசிருக்கு .........

    ReplyDelete

 
Top