மஹிந்தோதய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, களுதாவளை மகாவித்தியாலயத்தின்
தொழிநுட்ப விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா களுதாவளை
மகாவித்தியாலயத்தில் நேற்றைய தினம் (24.11.2012) பாடசாலை அதிபர்
சி.அலோசியஸ்
தலைமையில் இடம்பெற்றறது.அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டுவைத்தார். மேலும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பட்டிருப்பு கல்வி வலயகல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் மற்றும் பாடசாலை அதிபர் , ஆசிரியர் , பாடசாலை அபிவிருச் சங்கத்தினர், மாணவர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment