நம்ம நாட்டில்தான் தொழிலுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தா அடுத்த மாதம் வெளிநாடு போகப்போறன் என்று சொல்லுறவங்களத்தான் இப்ப
பார்க்ககூடியதா இருக்குது . அது மட்டுமா பள்ளிக்கு போற பசங்க கூட ஒழுங்கா பள்ளிக்கு போய் படிங்கடா எண்டு சொன்ன 18 வயசானா வெளிநாட்டுக்கு போகபோறன் எதுக்கு படிச்சு காசையும் நேரத்தையும் வீனாக்கணும் அப்படி என்று சொல்லுறாங்க இப்படி எல்லாப்பேருக்குமே வெளிநாட்டு மோகம் பிடிச்சு திரியிறாங்க
ஆனா நான் சொல்ல வார விஷயம் என்னன்னா வெளிநாடு போய் வாரவங்க சும்மா இருக்கிராங்களா இங்க இருக்கிறவங்கள போட்டு கொல்லுராங்கய்யா வெளிநாடு போய் வந்தா அங்க பேசுற ஒரு சில மொழிகளை அர குறையா தெரிஞ்சிகிட்டு அத இங்க இருக்கிற இவங்களோட கதைக்கிறாங்க நம்ம இங்க பேயடிச்சவன் மாதிரி நிக்க வேண்டி இருக்கு .
அது மட்டுமில்லங்க ஒரு சாதாரண வேலைதான் செய்திருப்பாரு நமக்கிட்ட பெரிய வில்டப்பல்லாம் கொடுத்து அந்த வேல செய்தன் இந்த வேல செய்தன் என்று ஆத்திரத்த உண்டு பண்ணுதுங்க வாய திறந்தா வெடிதான் எப்போ பாரு வெளிநாட்டு கததான் இவங்க வந்தாலே நின்ற இடம் தெரியாம ஓட வேண்டி இருக்கான்னா பாருங்களன்.
அவங்க வெளிநாட்டுல இருக்கும் போது லட்சக்கனக்கில அனுப்புனவங்களா என்று சொல்லுறாங்க ஆனா வெளிநாடு போய் 6 மாதத்தில திரும்பி வந்தவங்க என்ன செய்ற இப்படி சொல்லும் போது கேட்டிருக்கிற நாங்க மாறி மாறி முகத்த பாக்கிறான்.வேற வழிதான் என்ன
இப்படி ஏகப்பட்ட பொய்யச் சொல்லி வெளிநாடுகளை பற்றி செமையா வெளுத்து கட்டுறாங்க ஆனா ஒன்றுங்க அங்க இருக்கிற கஷ்டங்கள பற்றி யாருமே சொல்லவே மாட்டாங்களே இப்படி ஏகப்பட்டவங்க போட்டு படுத்துறாங்க
பட்டாத்தான் புரியும் பட்டு பாருங்க
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment