சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட மிகப்பாரிய ஆழிப்பேரலை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள புகழ்பெற்ற பூகோலம் மற்றும் கடல்சார்ந்த ஆராய்ச்சியாளர் பேரசிரியர் கெரி செய் இதனை தெரிவித்துள்ளார்.

சுமத்திராவில் ஏற்பட்ட நில அதிர்வின் விளைவாகவே 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

அதேபகுதியில் காணப்படுகின்ற குகையானது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஒன்றின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆழிப்பேரலையானது இந்தியாவின் தென்பகுதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழின வரலாற்றில், சங்க காலத்தில் ஏற்பட்ட பாரிய ஆழிப்பேரலை ஒன்றின் விளைவாக, கீழ் மதுரை எனப்படும் தற்போதைய மதுரையின் உண்மையான பகுதி அழிவடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சங்கம் அமைத்து உருவாக்கப்பட்ட பல அரிய தமிழ் நூல்களும் கடலோடு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் படி, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணின் அடிப்படையில் இந்த பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டு, குறிப்பிட்ட கால தவணையின் அடிப்படையில் ஆழிப்பேரலைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஒரு சீரான கால இடைவெளிகளுக்குள், இந்த பகுதியில் ஆழிப்பேரலைகள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
Top