இந்தோனேசியா நாட்டில் தன்னை கற்பழித்தவனை கொலை செய்து கணவனுடன் சேர்ந்து அவனது மர்ம உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத்தம்பதிகள் கைது செய்யபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியை சேர்ந்தவர் ரூடி எபண்டி (வயது 30) இவருக்கும் நூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் திருமணம் நடந்தது.

முதலிரவின்போது தனது மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்தது. இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதற்கு காராணம் யார்? என மனைவியிடம் கேட்டார். திருமணத்துக்கு முன்னர் தன்னை வேன் டிரைவர் ஒருவர் கற்பழித்து விட்டதாக நூரியா கூறினார்.

இதைத்தொடர்ந்து மனைவியை கொண்டு அதே வேன் டிரைவரை தனது வீட்டுக்கு அழைத்து வரச்செய்த ரூடி அவரை கொலை செய்தார். பின்னர், டிரைவரின் உறுப்பை வெட்டி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று மனைவியை அதை சமைத்து தருமாறு கூறி இருவரும் சாப்பிட்டு உள்ளனர் என போலீசார் கூறினர்.

இந்த கொலை தொடர்பாக அந்த புதுமணத்தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அந்த வேன் டிரைவர் நூரியாவை பலவந்தப்படுத்தி கற்பழிக்கவில்லை. அவராகவே விரும்பி டிரைவருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

 
Top