கொஞ்ச நாளாவே  நம்ம நாட்டுல அனைவருட வாயிலயும் கேட்கப்படுற ஒரு கேள்விங்க அந்த கேள்விய கேட்டா கொஞ்ச நாளால  கேட்டவங்கள கானேலாதுங்க என்னடா எண்டு பார்த்தா அவுஸ்திரேலியா ஜம் பண்ணிட்டாங்களா என்று சொல்லுவாங்க நம்ம நாட்ட விட்டுட்டு போய் தொலைய வேனுமெண்டே இருந்திருக்கிறாங்க போல ம்ம்ம்

பலர் அவுஸ்திரேலியா போய் நல்லா பணம் அனுப்புறாங்க  அத கண்டுட்டு அதைப்போல நாமளும் போகணும் பணம்  அனுப்பனும் மற்றது குடும்ப கஷ்டம் அடுத்தது ஏகப்பட்ட கடன்   மற்றது வெள்ளக்காரண்ட வாழ்கைதான்யா வாழ்க இதல்லாம் ஒரு நாடு அப்படி சொல்லுரவங்க இப்படி பலர் இருக்கிறாங்க இவங்க அவுஸ்திரேலியா போகத்துடிக்கிறவங்க

அவுஸ்திரேலியா போறது நல்ல ஆசைதான்  ஆனா போற வழிதானே பிரட்சனயான வழி இந்த பிரட்சனயான வழியால  போறது சுகமாத்தான் இருக்கும் அப்பிடி என்கிறது பலபேருட எண்ணம் எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.  ஆனா அண்டி சொன்ன கதையும் அவுஸ்திரேலியா போய் திரும்பி வந்தவங்க மற்றும்  அங்க போய் சேர்ந்த வங்க  இப்படி பலரும் அவங்கட அனுபவங்கள சொன்னாங்க அத இப்போ சொல்லலாம் போல இருக்கு.

நம்ம அண்டி போறது யாருக்குமே தெரியல்லயாம்  நம்ம ஏரிய பக்கம்தான் நின்னு கடல் வழி மூலம் அதுவும் இரவு நேரம் சுமார் 40,50, பேர் இருக்குமாம் குறிப்பிட்ட அளவு பொருட்களோட பிள்ள குட்டி  எல்லாபேரும் ஏறி போயிருக்கிரூக்காங்க  அப்புறம் என்ன போய்கொண்டே இருக்கிறாங்க கொஞ்ச நாள் போக போக சாப்பாடு முடின்சிட்டு

அப்புறம் என்ன அண்டி டீமுக்கு கஷ்ட காலந்தான் கொண்டு போன சாப்பாடு முடிஞ்சுது . பாவம்  வயிறு கேக்குமா என்ன?  கொஞ்ச நாள் கடல்ல மீன பிடிச்சி கொண்டு  கேஸ்ல சுட்டு சாப்பிட்டு இருக்கிறாங்க எப்படி கொஞ்ச நாள் வாழ்க்க .இதல்லாம் ஏன் தெரியுமா போன படகுட  எஞ்சின் பளுதாப் போயிட்டு அப்புறம் அதோ கெதிதான் .

குடிக்கிரத்துக்கு கொண்டு போன தண்ணி கூட முடிஞ்சு போச்சு கடல் தன்னியத்தான் குடிச்சி போயிருக்காங்க தண்ணி இல்ல சாப்பாடு இல்ல என்ன பண்ணுறது கடல் தண்ணிய குடிக்க  உடம்பிலையும் நோய் உண்டு பண்ணிட்டு என்ன செயற எண்டு தெரியாம  கடவுளே பிள்ளையாரே என்று சாமியத்தான் கும்பிட முடிஞ்சதாம்

கடவுள் புண்ணியத்தால ஒரு நாள் மழை பேன்சிருக்கு அதுல கிடந்த அண்டா குண்டா பொருட்கள் எடுத்து தண்ணிய பிடிச்சு  கொஞ்ச நாள்  அந்த தன்னிலையே வயித்த நிரப்பி இருக்காங்க அதில இரண்டு பேர் சரி அவங்க கடல்லதான் அப்புறம்அதிகமான பேருக்கு மயக்கம்
இந்த நேரத்தில இந்த்நோசிய மீன் படகு கண்ணுல இவங்க பட்டுகிட்டாங்க  இவங்கள பாத்தா யாருக்குத்தான்  கவல வராது அவங்க  இவங்கள கர சேர்த்திட்டாங்க

 இப்படி  71 நாட்கள் கடல்லையே வாழ்க்க  போயிருக்கு சொல்லும் போதே  அண்டி கண்ணுல கண்ணீர் சிந்திட்டு கேட்கவே மனஸ்தாபமா இருந்தது இப்படி ஒரு காசி சம்பாதிக்கனுமா ? நம்ம நாட்டிலே நம்ம வயித்த நிரப்புற மாதிரி தொழில செய்திட்டு நம்ம சொந்தங்களோட நம்ம நாட்டுல இருக்கிற இவ்வளவு மேல் இல்லையா

இப்படிதான் சில பேர் பட்டு திருந்தினத்தான் புரியும்
 என்ன நீங்களும் போகவா?


0 comments:

Post a Comment

 
Top